வாட்ஸ்அப்பின் ‘யூசர்நேம் அம்சம்’ - மெட்டாவிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இன்ஸ்டாகிராம் மாதிரியில் வாட்ஸ்அப்பை மாற்றுகிறது மெட்டா நிறுவனம்.
வாட்ஸ்அப்பின் ‘யூசர்நேம் அம்சம்’ - மெட்டாவிற்கு மத்திய அரசு நோட்டீஸ்
Published on

வாட்ஸ்அப்பில் தொலைபேசி நம்பருக்குப் பதிலாக அறிமுகமாக உள்ள 'யூசர்நேம்'அம்சம் தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்ப ஆலோசித்து வருகிறது.

செல்போன் எண்கள் மறைக்கப்பட்டால், மோசடிகள் அதிகமாகும். இதில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு சிக்கல் எழும் என மத்திய அரசு யோசிக்கிறது.

வாட்ஸ் அப்பின் இந்த புதிய அம்சத்தால் அரசு நிறுவனங்கள், பிரபலங்கள் அல்லது அரசு அதிகாரிகளின் பெயர்களில் போலி கணக்குகளை உருவாக்கி மக்களை எளிதில் ஏமாற்ற முடியும்.

இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் அடையாளங்களைக் கண்டறிந்து, அவர்களைக் கண்காணிப்பதில் புலனாய்வு அமைப்புகளுக்கும், காவல்துறைக்கும் பெரும் சவாலாக மாறும்.

இந்நிலையில் மத்திய அரசு இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசு இந்த அம்சத்தின் முழுமையான பாதுகாப்புத் தன்மையை ஆய்வு செய்த பிறகே இந்தியாவில் இதனை முழுமையாக அனுமதிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

மெட்டாவின் இந்த புதிய திட்டம் என்ன?

இன்ஸ்டாகிராமை போல, வாட்ஸ் அப்பிலும் பெயரை வைத்து கணக்குத் தொடங்கும் வசதியை மெட்டா அறிமுகப்படுத்துகிறது. பயனர்கள் விரும்பும்போதெல்லாம் தங்கள் பயனர் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.

முதல்முறையாக ஒருவரிடம் பேசும்போது தேவைக்காக அவர்களிடம் தொலைபேசி எண்களை கொடுப்பதை பெரும்பாலனோர் விரும்புவதில்லை என்பதால், இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக வாட்ஸ்அப்பின் தயாரிப்புத் தலைவர் ஆலிஸ் நியூட்டன்-ரெக்ஸ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com