West Bengal: பாஜக பிரசார பொருட்களை தயார் செய்யும் தேர்தல் அதிகாரி - வீடியோ வைரல்

அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
West Bengal: பாஜக 
பிரசார பொருட்களை தயார் செய்யும் தேர்தல் அதிகாரி  - வீடியோ வைரல்
Published on

மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் பாஜகவின் கொடிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களைச் சீர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பானிஹாட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதனு சக்ரவர்த்தி என்ற அடையாளம் காணப்பட்ட அந்த தேர்தல் அதிகாரி, செக்டார் ஆபீசராக பணியாற்றி வருகிறார்.

தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சார்பாகச் செயல்படக் கூடாது என்ற விதியை மீறி, அதனு சக்ரவர்த்தி பாஜகவின் பிரச்சாரப் பொருட்களைக் கையாண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது.

அதனு சக்ரவர்த்தியை உடனடியாக அனைத்துத் தேர்தல் பணிகளிலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com