ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடியை சந்தித்தார் மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி

சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9-ம் தேதி பதவியேற்றது.
சுவேந்து அதிகாரி
Published on

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றது. பாஜக சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து ஆட்சி அமைக்க சுவேந்து அதிகாரி உரிமை கோரினார். ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த நிலையில் முதல் மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.

சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9-ம் தேதி பதவியேற்றது. கொல்கத்தாவில் உள்ள படைவீரர் அணிவகுப்பு மைதானத்தில் இந்த விழா நடைபெற்றது. சுவேந்து அதிகாரி மற்றும் புதிய மந்திரிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சுவேந்து அதிகாரி

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்றபின் சுவேந்து அதிகாரி இன்று தலைநகர் டெல்லிக்குச் சென்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com