உணவு பாதுகாப்பு சட்ட திருத்தம் குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மாதமும் 35 கிலோகிராம் உணவு தானியங்களை பெறுகிறது.
‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா எந்த விதத்திலும் மீறக்கூடாது’ - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
Published on

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (NFSA), 2013-இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் உணவு பாதுகாப்பு சட்ட மாற்றங்களால், மாநிலத்தில் உள்ள சுமார் 70 லட்சம் ஏழை மற்றும் மிகவும் நலிவடைந்த மக்களின் உணவு தானிய உரிமைகள் கடுமையாக குறைந்துவிடும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

35 கிலோகிராம்:

மேலும், அந்த்யோதயா அன்ன யோஜனாவின் (AAY) கீழ் தற்போதுள்ள விதிமுறையை தக்கவைக்க கோரியிருந்தார். அந்தியோதயா யோஜனாவின் கீழ், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல், தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மாதமும் 35 கிலோகிராம் உணவு தானியங்களை பெறுகிறது.

2026-ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவின் வரைவு, இதற்கு பதிலாக ஒரு நபருக்கு மாதத்திற்கு 7 கிலோகிராம் உணவு தானியங்கள் என்ற உரிமையை முன்மொழிகிறது; இது ஒரு குடும்பத்திற்கு அதிகபட்ச வரம்பான 35 கிலோகிராமுக்கு உட்பட்டது.

பிரிவுகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, உரிமைகளை ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப இன்னும் நெருக்கமாக சீரமைப்பதே இந்த திருத்தத்தின் நோக்கம் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில், மாநிலத்தின் சராசரி குடும்ப அளவு வெறும் 3.54 உறுப்பினர்கள் மட்டுமே என்பதால், தமிழ்நாட்டின் மிகவும் ஏழ்மையான குடும்பங்களை சென்றடையும் உணவு தானியங்களின் அளவில் கணிசமான குறைவு ஏற்படும் என்பதே இதன் நடைமுறை விளைவாக இருக்கும், என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com