முகத்தில் கேக் பூசியதால் ஆத்திரம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 3 நண்பர்களை சுட்டுக் கொன்ற நபர் | Uttar pradesh

உரிமம் பெற்ற சுமார் ஏழு துப்பாக்கிகளுடன் மீண்டும் வந்து மூவரை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள்
கொல்லப்பட்டவர்கள்
Published on

உத்தரப்பிரதேசத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சிறிய தகராறு மூன்று இளைஞர்களின் உயிரைப் பறித்துள்ளது.

புலந்த்சாஹரில் குர்ஜா நகர் பகுதியில் நேற்று இரவு ஜீது சைனி என்பவரது பிறந்தநாள் விழா ஜிம் ஒன்றில் வைத்து நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட நண்பர்கள், அமர்தீப் சைனி, மனீஷ் சைனி மற்றும் ஆகாஷ் சைனி ஆகிய மூவர் விளையாட்டாக அவரது முகத்தில் கேக் பூசியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜீது சைனிக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகராறுக்கு பிறகு அங்கிருந்து சென்ற ஜீது சைனி மற்றும் அவரது கூட்டாளிகள், உரிமம் பெற்ற சுமார் ஏழு துப்பாக்கிகளுடன் மீண்டும் வந்து மூவரை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

தகவல அறிந்து வந்த காவல்துறை சம்பவ இடத்தில் ஆய்வு செய்து ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள ஜீது சைனி மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது ஒரு திட்டமிட்ட கொலை என்று உயிரிழந்த அமர்தீப்பின் சகோதரன் சஞ்சய் சைனி குற்றம் சாட்டியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com