பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி சந்திப்பு

வெளியுறவு மந்திரியாக பதவியேற்ற பின் மார்கோ ருபியோ இந்தியா வருவது இதுவே முதல் முறை.
PM Modi, Marco Rubio
Published on

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொல்கத்தாவில் அன்னை தெரசா நிறுவிய கருணை பணியாளர் அமைப்பின் தலைமையகத்தை பார்வையிட்ட அவர், கொல்கத்தாவின் புகழ்பெற்ற விக்டோரியா நினைவகத்திற்கும் சென்றார்.

இதையடுத்து, இன்று காலை அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ டெல்லி வந்தடைந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ இன்று நேரில் சந்தித்தார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் உடனிருந்தார்.

மேற்காசிய போரால் சர்வதேச அளவில் எரிவாயு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்துவரும் சூழலில் அமெரிக்க வெளியுறவு மந்திரியின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்க வெளியுறவு மந்திரியாக பதவியேற்ற பின் மார்கோ ருபியோ இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை டெல்லியில் நடைபெறும் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்திலும் மார்க் ரூபியோ பங்கேற்க உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com