இந்தியா எரிபொருள் தட்டுப்பாடு நெருக்கடியை எதிர்கொள்ளாததற்கு மோடியின் தலைமைதான் காரணம்: யோகி ஆதித்யநாத்

அமெரிக்கா- ஈரான் மோதலின்போது, ​​உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. மோடிஜியின் தலைமையின் கீழ், நாடு எரிசக்தி நெருக்கடியை சந்திக்காதவாறு உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார் யோகி ஆதித்யநாத்.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்யோகி ஆதித்யநாத்
Published on

உத்தர பிரதேச மாநில தலைவர் யோகி ஆதித்யநாத் லலித்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்தை பெற்றுள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள், ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு ஒரு தகுந்த பாடம் கற்பித்தன. உத்தர பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள், பாகிஸ்தானை உதவி கோரி கதறவும், தன்னை காப்பாற்றிக்கொள்ள கெஞ்சவும் கட்டாயப்படுத்தின.

அமெரிக்கா- ஈரான் மோதலின்போது, ​​உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. மோடிஜியின் தலைமையின் கீழ், நாடு எரிசக்தி நெருக்கடியை சந்திக்காதவாறு உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதுடன், பணவீக்கமும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com