

திருநங்கைகள் திருத்த மசோதா 2026-க்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய திருநங்கைகள் மன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தெற்கு மண்டல பிரதிநிதி கல்கி சுப்பிரமணியமும், வடக்கு மண்டல பிரதிநிதி ரிதுபர்ணா நியோக்-ம் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த திருத்த மசோதா திருநங்கைகள் தங்கள் பாலினத்தை தாங்களே சுயமாக அடையாளம் காணும் அடிப்படை உரிமையை பறிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மசோதாவை இறுதி செய்வதற்கு முன்பு சமூகப் பிரதிநிதிகளிடமோ அல்லது தங்கள் மன்றத்திடமோ உரிய ஆலோசனைகள் எதுவம் நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சட்டத் திருத்தம் திருநங்கைகளின் கண்ணியத்திற்கு எதிரானது என்றும், அடிப்படை உரிமைகளில் இது ஒரு "பின்னோக்கிய அடி" என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மக்களவையைத் தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ராஜிநாமாக்கள் நிகழ்ந்துள்ளன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் இந்த மசோதாவிற்கு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.