திரிணாமுல் காங்கிரசின் 50 எம்எல்ஏ, 20 எம்பிக்கள் பாஜகவில் சேர தயார் - பாஜக எம்.பி. பரபரப்பு

திரிணமூல் காங்கிரஸ் இனி ஒரு அரசியல் கட்சியாகவே நீடிக்க முடியாது.
திரிணாமுல் காங்கிரசின் 50 எம்எல்ஏ, 20 எம்பிக்கள் பாஜகவில் சேர தயார் - பாஜக எம்.பி. பரபரப்பு
Published on

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுத்தது.

இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி அலை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசின் 91 உள்ளாட்சி கவுன்சிலர்கள் தங்கள் பதவியை கூட்டாக ராஜினாமா செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பராசத் எம்.பி ககோலி கோஷ் தஸ்திகர், திரிணாமூல் காங்கிரஸில் உள்ள அனைத்துப் பதவிகளிலிருந்தும் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரசின் 50 என்எல்ஏக்கள் மாற்றம் 20 எம்.பிக்கள் பாஜகவில் இணைய தயாராக இருப்பதாக பாஜக எம்.பி சௌமித்ரா கான் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இது மேற்கு வங்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்பி சௌமித்ரா கான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பாஜகவின் டெல்லி தலைமை மட்டும் பச்சைக்கொடி காட்டினால், திரிணமூல் காங்கிரஸ் இனி ஒரு அரசியல் கட்சியாகவே நீடிக்க முடியாது. அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 50 எம்எல்ஏ-க்களும், 20 எம்பி-க்களும் தற்போதைய தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் பாஜாகவில் இணைய முழு சம்மதத்துடன் தயாராக இருக்கிறார்கள். இவர்களைக் கட்சியில் இணைக்க பாஜக தலைமை முடிவெடுத்தால், திரிணாமுல் காங்கிரஸ் தனது அரசியல் அடையாளத்தை முழுமையாக இழந்துவிடும்."

பாவம் செய்தவர்கள் அனைவரும் சிறைக்குச் செல்ல வேண்டும். இன்று திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் வீட்டின் முன்னால் புல்டோசர்கள் தயாராக நிற்கின்றன.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அவர்கள் பாஜக தொண்டர்களின் வீடுகளை இடித்துத் தள்ளினர். பாவம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை உடனடியாக அனுபவித்தே தீர வேண்டும். அவர் நரகத்திற்குத்தான் செல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதனிடையே திரிணமூல் காங்கிரஸின் மூத்த எம்பியான சௌகதா ராய், "சௌமித்ரா கான் மற்றும் பாஜாகவினர் திட்டமிட்டுத் தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் இது போன்ற அரசியல் குதிரை பேரங்களோ அல்லது கட்சித் தாவல்களோ ஒருபோதும் நடக்காது" என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com