பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை தடுப்பவர்களை காலம் மன்னிக்காது- பிரதமர் மோடி

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது காலத்தின் கட்டாயம் என பிரதமர் மோடி கூறினார்.
பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை தடுப்பவர்களை காலம் மன்னிக்காது- பிரதமர் மோடி
Published on

மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மசோதாக்கள் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய நாடாளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்.

மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் தேசத்தின் முக்கிய தருணத்தில் நானும் உடனிருக்கிறேன் என்பதில் பெருமை.

மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது காலத்தின் கட்டாயம்.பெண் சக்திக்கு அதிகாரமளிப்பதன் மூலம் நாட்டுக்கு புதிய வழி காட்டுகிறோம்.

இத்தகைய முக்கிய மசோதாவை நிறைவேற்ற கிட்டியுள்ள வாய்ப்பு நமது பாக்கியம்.

மசோதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை மகளிர் மன்னிக்க மாட்டார்கள். பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை தடுப்பவர்களை காலம் மன்னிக்கவே மன்னிக்காது.

எதிர்க்கட்சியினர் தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவித்து, பொதுவெளியில் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com