search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டாம் - 33% இட ஒதுக்கீடு மசோதா குறித்து கனிமொழி
    X

    பெண்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டாம் - 33% இட ஒதுக்கீடு மசோதா குறித்து கனிமொழி

    • சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்.
    • மூன்றாவது நாள் முழுக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கி வெள்ளி கிழமை (செப்டம்பர் 22) வரை என மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

    இன்று மூன்றாவது நாள் முழுக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்றைய விவாதத்தில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, பெண்களுக்கு சமமான மதிப்பு கொடுத்தாலே போதுமானது என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் பேசும் போது, "பெண்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டாம், அவர்களை கொண்டாட வேண்டாம். பெண்களை சமமாக நடக்க அனுமதியுங்கள். எங்களை தாய் என்றோ சகோதரி என்றோ மனைவி என்றோ அழைக்க வேண்டாம். எங்களையும் சமமாக நினைத்து, மரியாதை அளித்தாலே போதுமானது."

    "இந்த விவகாரம் தொடர்பாக என்ன கருத்தொற்றுமை உருவாக்கப்பட்டு இருக்கிறது. என்னென்ன விவாதங்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்த மசோதா மிகவும் ரகசியமாக கொண்டுவரப்பட்டு இருக்கிறது. எங்களுக்கும் உரிமை உள்ளது. இந்த நாடு எங்களுக்கு சொந்தமானது. இந்த நாடாளுமன்றம் எங்களுக்கு சொந்தமானது," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×