search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 65 ஆக குறைந்தது
    X

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 65 ஆக குறைந்தது

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 158 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 289 பேர் குணமடைந்துள்ளனர்.
    • தற்போது 1,755 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 93 குறைவு ஆகும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 109 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 80 ஆக குறைந்த நிலையில் இன்று பாதிப்பு 65 ஆக சரிந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 784 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 158 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 289 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போது 1,755 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 93 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் 2-வது நாளாக நேற்றும் புதிய உயிரிழப்புகள் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,740 ஆக நீடிக்கிறது.

    Next Story
    ×