என் மலர்
இந்தியா

புதிதாக 193 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 687 பேர் மீண்டுள்ளனர். இதில் நேற்று 127 பேர் அடங்குவர்.
- கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 95 ஆக இருந்தது. நேற்று 125 ஆக உயர்ந்த நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் பாதிப்பு உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 193 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 85 ஆயிரத்து 450 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 687 பேர் மீண்டுள்ளனர். இதில் நேற்று 127 பேர் அடங்குவர்.
கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட இன்று 65 அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 2,000 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லியில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,763 ஆக உயர்ந்துள்ளது.






