தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- மேலும் 185 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 203 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நேற்று 104 பேர் அடங்குவர்.கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறது.
தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- மேலும் 185 பேருக்கு கொரோனா
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 218 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 185 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 203 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நேற்று 104 பேர் அடங்குவர்.

கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த எண்ணிக்கை நேற்றை விட இன்று 80 அதிகரித்துள்ளது. அதாவது இன்று காலை நிலவரப்படி 2,229 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொற்று பாதிப்பால் புதிதாக உயரிழப்புகள் இல்லை. அதேநேரம் கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,770 ஆக உயர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com