தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 128 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 147 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 519 பேர் குணமடைந்துள்ளனர்.தற்போது 1,763 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 128 பேருக்கு கொரோனா
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு 111 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 23 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 147 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 519 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 1,763 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 20 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று உத்தரபிரதேசத்தில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,741 ஆக உயர்ந்துள்ளது

X

Maalai Malar
www.maalaimalar.com