புதிதாக 126 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று அதிகரிப்பு

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 113 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 910 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,835 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புதிதாக 126 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று அதிகரிப்பு
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 74 ஆக இருந்தது. நேற்று 102 ஆக உயர்ந்த நிலையில், இன்று புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 113 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 910 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 1,835 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 12 அதிகமாகும். தொற்று பாதிப்பால் நேற்று கர்நாடகாவில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,757 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com