என் மலர்
இந்தியா

இந்தியாவில் மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 111 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 49 ஆயிரத்து 547 பேர் நலம் பெற்றுள்ளனர்.
- தற்போது 1,922 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு நேற்று முன்தினம் 94, நேற்று 89 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் 100-ஐ தாண்டி உள்ளது.
மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 206 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 111 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 49 ஆயிரத்து 547 பேர் நலம் பெற்றுள்ளனர்.
தற்போது 1,922 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,737 ஆக நீடிக்கிறது.
Next Story






