இந்தியாவில் மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 111 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 49 ஆயிரத்து 547 பேர் நலம் பெற்றுள்ளனர்.தற்போது 1,922 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவில் மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு நேற்று முன்தினம் 94, நேற்று 89 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் 100-ஐ தாண்டி உள்ளது.

மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 206 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 111 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 49 ஆயிரத்து 547 பேர் நலம் பெற்றுள்ளனர்.

தற்போது 1,922 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,737 ஆக நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com