ஒரே பிரசவத்தில் 6 துரோகிகளை பெற்றெடுத்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே - சஞ்சய் ராவத் தாக்கு

இனி சிசேரியன் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும்.
ஒரே பிரசவத்தில் 6 துரோகிகளை பெற்றெடுத்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே - சஞ்சய் ராவத் தாக்கு
Published on

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மக்களவை எம்.பி.க்கள் 6 பேர் நேற்று ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் ஐக்கியமாகினர்.

இதுகுறித்து உத்தவ் சிவாசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில்,

"கென்ய பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளைப் பெற்று உலக சாதனை படைத்ததாகக் கேள்விப்பட்டோம்.

ஆனால், இங்கே ஏக்நாத் ஷிண்டே கர்ப்பமாக இருந்து, ஒரே பிரசவத்தில் 6 துரோகிகளைப் பெற்றெடுத்துள்ளார்.

இதற்கான தொட்டில் அவரது அதிகாரப்பூர்வ இல்லமான நந்தபவனில் ஆடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலைமையை சரிசெய்ய இனி சிசேரியன் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவமரியாதை

முன்னதாக, கட்சி மாறத் திட்டமிட்டிருந்த எம்பிக்களை சஞ்சய் ராவத் அவமரியாதையாக பேசியதும், அதற்குப் பிறகே தாங்கள் கட்சியை விட்டு வெளியேறும் முடிவை இறுதி செய்ததாகவும் அதிருப்தி எம்பி நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த 6 எம்பிக்களின் மூலம், மக்களவையில் ஷிண்டே சிவசேனா பலம் 7லிருந்து 13 ஆக உயர்ந்துள்ளது. உத்தவ் அணியில் தற்போது 3 எம்பிக்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com