இந்தியாவின் சமத்துவத்தை சிதைத்து அரசியலமைப்பை அழிக்க ஆர்எஸ்எஸ்-பாஜக முயற்சி - ராகுல் காந்தி

அம்பேத்கரின் சிலைக்கு முன்னால் பாஜகவினர் தலைவணங்கினாலும், அவர்களின் பின்னணி நோக்கம் அரசியலமைப்பைச் சிதைப்பதே.
இந்தியாவின் சமத்துவத்தை சிதைத்து அரசியலமைப்பை அழிக்க ஆர்எஸ்எஸ்-பாஜக முயற்சி  - ராகுல் காந்தி
Published on

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படவிருக்கிறது.

இந்நிலையில் டெல்லி, மண்டி ஹவுஸ் பகுதியில், "Run for Ambedkar, Run for Constitution" என்ற மாரத்தான் போட்டியை மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக, "சமமான இந்தியா" என்ற கருத்தியலை எதிர்க்கின்றன. இந்திய அரசியலமைப்பை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் விரும்புகின்றனர்.

அம்பேத்கரின் மிக முக்கியமான செய்தி 'அரசியலமைப்பு' தான். இந்த அரசியலமைப்பு இல்லையென்றால் நாம் காணும் இந்தியா இருந்திருக்காது.

பாஜக தலைவர்கள் என்ன பேசினாலும், அவர்களின் உண்மையான நோக்கம் அரசியலமைப்பை அழிப்பதே ஆகும்.

அம்பேத்கரின் சிலைக்கு முன்னால் பாஜகவினர் தலைவணங்கினாலும், அவர்களின் பின்னணி நோக்கம் அரசியலமைப்பைச் சிதைப்பதே.

ஆனால் காங்கிரஸின் நோக்கம் அந்த அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், பலப்படுத்துவதும் ஆகும்.

அரசியலமைப்பின் விழுமியங்களை நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த மாரத்தான் போட்டியின் நோக்கம்.

அம்பேத்கரின் கொள்கைகள் மீது காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள அசைக்க முடியாத பற்றுறுதியை இந்த மாரத்தான் பிரதிபலிக்கிறது" என்று தெரிவித்தார்

இந்த மாரத்தான் போட்டியை காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவு ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com