பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைத்த ரோகித் மனைவி

சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ரஃபா நகர் மீது வான்தாக்குதல் நடத்தியது.இதில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைத்த ரோகித் மனைவி
Published on

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ரஃபா நகர் மீது வான்தாக்குதல் நடத்தியது. அப்போது ரஃபா நகரில் உள்ள முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கிடையாது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்திடவும், ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 'ALL EYES ON RAFAH' என ஸ்டோரி வைத்து, சிறிது நேரத்தில் அதனை டெலீட் செய்துள்ளார்.

தற்போது அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com