

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கேரள மாநிலம் பெரம்ப்ரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கவலை வேண்டாம், தயவு செய்து ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். எது நடந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சி நரேந்திர மோடியை நிச்சயம் முறியடிப்போம். அவர் எவ்வளவு வேகமாக வேண்டுமானாலும் ஓடலாம், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ஓடலாம். ஆனால் இறுதியில், காங்கிரஸ் கட்சி நரேந்திர மோடியை பிடித்தே தீரும். மேலும் இந்தியாவின் பிரதமர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை நாங்கள் இந்த முழு நாட்டிற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.