டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர மோடி 5 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி
Published on

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டார். அவர் 6 நாட்கள் பயணமாக 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், நார்வே, சுவீடன், நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து, இருதரப்பு விவகாரங்கள் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வதுடன், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்க உள்ளார்.

பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதாக இருக்கும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com