உலக சுகாதார தினம்: ஆரோக்கியமான பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி- பிரதமர் மோடி

சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தவும், ஒவ்வொரு தனிநபரின் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்.
உலக சுகாதார தினம்: ஆரோக்கியமான பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி- பிரதமர் மோடி
Published on

உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு 1948-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி உலக சுகாதார நிறுவனம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆண்டு தோறும் இதை நினைவுகூரும் வகையில் ‘உலக சுகாதார தினம்’ கொண்டாடப்படுகிறது.

இதனை தொடர்ந்து இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

உலக சுகாதார தினமான இன்று, பிறர் சேவைக்காகத் தங்களை அயராது அர்ப்பணித்துக்கொண்டு, ஆரோக்கியமானதொரு பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், ஆரோக்கியமானதொரு சமூகத்தை கட்டமைப்பதில் எமக்கிருக்கும் உறுதியை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தவும், ஒவ்வொரு தனிநபரின் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com