Iran War | மேற்காசிய நிலவரம் குறித்து குவைத் இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சு

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து குவைத் இளவரசருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
Iran War | மேற்காசிய நிலவரம் குறித்து குவைத் இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சு
Published on

குவைத் இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல் சபா உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் இன்று பேசினார்.

அப்போது, புனித ரமலான் பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழல் குறித்தும் கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

மேற்காசியாவில் உருவாகி வரும் சூழல் குறித்து நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். சமீபத்திய நிகழ்வுகள் குறித்த கவலைகளையும் பகிர்ந்து கொண்டோம்.

குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வது எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.

பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு, நீடித்த ராஜதந்திர ஈடுபாடு இன்றியமையாதது என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் அவரின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com