

வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும் என்று பிரதமர் மோடி கூறினார்.
மேற்காசியாவில் நடைபெறும் போர் தொடர்பாக பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மேற்கு ஆசியாவில் போர் தொடங்கி 3 வாரங்களுக்கு மேலாகி விட்டது, இது கடுமையான எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு ஆசிய போரால் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உரங்களின் வழக்கமான விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டது என்பது உலகப் பொருளாதாரத்தில பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹார்மூஸ் நீரிணையில் பல கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் ஏராளமான இந்திய மாலுமிகள் சிக்கி உள்ளனர்.
ராஜதந்திர நடவடிக்கை மூலம் போர்சூழலிலும் இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்ய முயன்று வருகிறோம்.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.