மே 4-ம் தேதிக்கு பிறகு வளர்ச்சியில் புதிய அத்தியாயம் காணும் வங்கம்: பிரதமர் மோடி

முதல் கட்டமாக வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அங்கு முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி இன்று 3 இடங்களில் நடைபெறும் பேரணியில் பங்கேற்கிறார். ஹால்டியா, அசன்சோல் மற்றும் சியுரி ஆகிய இடங்களில் நடக்கும் பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசிவருகிறார். அப்போது அவர் பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் பாவங்கள் ஒருநாள் முடிவுக்கு வந்துவிட்டன.

வங்கத்தின் அடுத்த அரசாங்கம் இரட்டை எஞ்சின் அரசாங்கமாக இருக்கும்.

மே 4-ம் தேதிக்குப் பிறகு வங்காளம் ஒரு புதிய வளர்ச்சிக் காலத்திற்குள் நுழையும்.

வங்கத்தின் முன்னேற்றத்திற்கு திரிணாமுல் காங்கிரசிடம் இருந்து விடுதலை பெறுவது இன்றியமையாதது என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com