

உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தையும், பிரயாக்ராஜ் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 594 கிலோமீட்டர் நீளம் கொண்ட எக்ஸ்பிரஸ் சாலைக்கு கங்கா எக்ஸ்பிரஸ் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ்பிரஸ் சாலை மீரட், புலந்தசாஹர் உள்ளிட்ட 12 மாவட்டங்களையும் இணைக்கிறது.
சுமார் 36,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் சாஜஹான்பூர் பகுதியில் அவசர காலத்தில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் இறங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த எக்ஸ்பிரஸ் சாலை வாகனங்கள் அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உ.பி.யில் அமைக்கப்பட்டுள்ள கங்கா எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
மீரட் முதல் பிரயாக்ராஜ் வரையிலான இந்த எக்ஸ்பிரஸ் சாலை உத்தரபிரதேசத்தின் வளர்ச்சிக்கு மேலும் உந்துசக்தியாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.