கல்பாக்கம் அணு உலை சோதனை: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதிய அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிகளை 2024, மார்ச்சில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கல்பாக்கம் அணு உலை சோதனை: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Published on

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, புதிய அணுமின் நிலையம் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து பாவினி என்ற பெயரில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி, மேற்கண்ட புதிய அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தோரியத்திலிருந்து நியூட்ரான் பிரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இது படிப்படியாக முன்னேறி மின் உற்பத்தியை தொடங்கும் நிலையில் உள்ளது.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

இந்தியா தனது அணுசக்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுத்து, அணுசக்தி பயணத்தில் முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது.

கல்பாக்கத்தில், உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன் மாதிரி வேக அணு உலை நிலை மாற்ற நிலையை எட்டியுள்ளது.

இந்த மேம்பட்ட அணு உலை, நமது அறிவியல் திறனின் ஆழத்தையும், பொறியியல் துறையின் வலிமையையும் பிரதிபலிக்கிறது.

இந்தியாவுக்கு இது பெருமைக்குரிய தருணம். நமது விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com