மன் கி பாத்: தேசிய சாதனை படைத்த தடகள வீரர்களை பாராட்டிய பிரதமர் மோடி

சோழர்களின் கடல் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வலிமையானது என்பதை அறிந்து வியந்தேன் என்றார் பிரதமர் மோடி.
pm modi
Published on

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், 134-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பான செயல்பாடுகள் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் சாதனைகள் புதிய அளவுகோல்களை உருவாக்குவதோடு, அடுத்த தலைமுறை வீரர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சமீபத்தில் நடந்த தேசிய சீனியர் தடகள சம்மேளன போட்டியில் பல்வேறு பிரிவுகளில் 4 தேசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

குரிந்தர்வீர் சிங், விஷால் டி.கே., தேஜஸ்வின் சங்கர், தேவ் மீனா மற்றும் குல்தீப் குமார் ஆகியோர் தத்தமது பிரிவுகளில் புதிய சாதனைகளை படைத்துள்ளனர். அவர்களின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தேசிய சாதனை மூன்று முறை முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . குரிந்தர்வீர் சிங் மற்றும் அனிமேஷ் குஜூர் ஆகியோரின் சாதனைகள் இந்திய தடகளத்தின் வளர்ந்து வரும் வலிமையை வெளிப்படுத்துகின்றன.

சோழப் பேரரசின் முழுமையான வரலாறு, கலாசாரம் எண்ணி பெருமை கொள்கிறோம். விரைவில் நெதர்லாந்தில் இருந்து சோழர் கால செப்பேடுகள் கொண்டு வரப்பட உள்ளன.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சோழர்களின் கடல் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வலிமையானது என்பதை அறிந்து வியந்தேன் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com