

FIH மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும், போட்டியின் அனைத்து நிலைகளிலும் இந்திய அணி மிக சிறப்பாக விளையாடியதாக அவர் குறிப்பிட்டார்.
ஆக்லாந்தில் நடைபெற்ற இறுதி போட்டியில், தொடரை நடத்தும் நாடான நியூசிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்தியா தனது இரண்டாவது FIH மகளிர் நேஷன்ஸ் கோப்பை பட்டத்தை வென்றதுடன், FIH மகளிர் ப்ரோ லீக் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பையும் உறுதி செய்தது.
"இந்திய ஹாக்கி வீராங்கனைகள் பெருமையையும், மகிழ்ச்சியையும் தேடித்தந்துள்ளனர்! FIH மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு வாழ்த்துகள். அணிக்கு எனது நல்வாழ்த்துகள். இந்த வெற்றி, ஹாக்கி விளையாட பலரையும் ஊக்குவிக்கட்டும்,"," என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.