இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.இந்திய அணிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
Published on

குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

3வது முறையாக உலகக்கோப்பையை வெல்வோம் என்கிற இந்திய அணியின் கனவு இந்த முறையும் கனவாகவே போனது. இருப்பினும், இந்திய அணிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்களும் இந்திய அணிக்கு பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்," உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். போட்டியின் மூலம் அவர்களின் ஒரு பாராட்டுக்குரிய செயல்திறன் மற்றும் ஒரு அற்புதமான வெற்றியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இன்று அவரது சிறப்பான ஆட்டத்திற்காக டிராவிஸ் ஹெட்க்கு பாராட்டுக்கள்.

அன்புள்ள இந்திய அணி, உலகக் கோப்பையின் மூலம் உங்கள் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் துணை நிற்கிறோம்" என குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில்," உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்.

அரையிறுதி வரை தோற்கடிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டிக்கு உற்சாகமாக நுழைந்த இந்திய அணிக்கு பாராட்டுக்கள். உங்கள் நெகிழ்ச்சியும் ஆர்வமும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com