நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து இனி ஒருவர் பிரதமராவது சாத்தியமற்றது: ராகுல் காந்தி பிறந்த நாளில் பா.ஜ.க. கேலி

நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக இருந்த காலம் என்பது வெகு காலத்திற்கு முந்தைய ஒரு விஷயமாகிவிட்டது.
ராகுல் கா்ந்தி பிறந்தநாள்
ராகுல் கா்ந்தி பிறந்தநாள்ராகுல் கா்ந்தி பிறந்தநாள்
Published on

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தன்னுடைய 56-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். தற்போதைய பிரதமர் மோடி அரசை எதிர்க்க எதிர்க்கட்சிகளை ராகுல் காந்தி ஒன்று திரட்டி வருகிறார். ராகுல் காந்திதான் பாஜக கூட்டணிக்கு எதிரான பிரதமர் வேட்பாளராக களம் நிறுத்தப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறிக் கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இனிமேல் நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவரும் பிரதமராக வாய்ப்பு இல்லை என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுதான்ஷு திரிவேதி கூறியதாவது;-

நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக இருந்த காலம் என்பது வெகு காலத்திற்கு முந்தைய ஒரு விஷயமாகிவிட்டது. அக்குடும்பத்தைச் சேர்ந்த கடைசி பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி ஆவார். 1989-க்குப் பிறகு 37 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இன்றும் கூட, எதிர்காலத்தில் ராகுல் காந்தி பிரதமராவதைப் பற்றி பேசப்படுகிறது என்றால், அவர் வெறும் அற்பமான அல்லது குறும்புத்தனமான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, களத்தில் ஆக்கபூர்வமான மற்றும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் 'குழந்தைகள் தினமாக' கொண்டாடப்பட்டு வந்தது என்று நான் கருதுகிறேன். ராகுல் காந்தியின் பிறந்தநாளை எந்த தினமாக கொண்டாடலாம் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை மக்களிடமும் பார்வையாளர்களிடமும் விட்டுவிடுகிறேன்.

இவ்வாறு சுதான்ஷு திரிவேதி தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com