எந்த ஒரு மாநிலத்திற்கும் அநீதி இழைக்கப்படாது..!- பிரதமர் மோடி

பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கவில்லை, அவர்களது உரிமையை தான் நாம் தற்போது கொடுக்கிறோம்.
எந்த ஒரு மாநிலத்திற்கும் அநீதி இழைக்கப்படாது..!- பிரதமர் மோடி
Published on

மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மசோதாக்கள் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மசோதாக்களுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். அரசியல் காரணங்களுக்காக பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தரவில்லை.

எந்த ஒரு விஷயத்திலும் எந்த ஒரு மாநிலத்திற்கும் அநீதி இழைக்கப்படாது.

எல்லா துறையிலும் பெண்கள் வலிமையை நிரூபித்திருக்கிறார்கள், அவர்களது உரிமையை தடுக்க கூடாது.

பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கவில்லை, அவர்களது உரிமையை தான் நாம் தற்போது கொடுக்கிறோம்.

தற்போதைய மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவால் யாருக்கும் பாதகம் ஏற்படாது என உறுதிமொழி வழங்கத் தயார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com