நக்சலிசம் இந்தியாவில் ஏறத்தாழ ஒழிந்துவிட்டது - அமித் ஷா | Naxal

கடந்த ஓராண்டில் மட்டும் 706 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர், 4,800 பேர் சரணடைந்துள்ளனர்.
நக்சலிசம் இந்தியாவில்  ஏறத்தாழ ஒழிந்துவிட்டது - அமித் ஷா | Naxal
Published on: 

இந்தியாவில் நக்சலிசம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 31 ஆம் தேதி நக்சலிசம் முற்றிலும் ஒழிக்கப்டும் என அமித் ஷா முன்னதாக இலக்கு நிர்ணயித்திருந்தார்.

ஆபரேஷன் காகர் என்ற பெயரில் பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடித் தேடி வேட்டையாடினர்.

இந்நிலையில் நேற்று மக்களவையில் பேசிய அமித் ஷா, ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாகக் கருதப்பட்ட சத்தீஸ்கரின் பாஸ்தர் பகுதியில், நக்சலிசம் தற்போது ஏறக்குறைய முழுமையாக துடைத்தெறியப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் 706 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர், 4,800 பேர் சரணடைந்துள்ளனர்.

சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்கு அரசியலமைப்பிலேயே தீர்வுகள் உள்ளன. ஆயுதம் ஏந்துவது சரியான வழியல்ல. எவர் ஆயுதம் ஏந்தினாலும் அவர்கள் அதற்கான தகுந்த விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

நக்சல் வன்முறை காரணமாக 12 கோடி மக்கள் வறுமையில் வாடியுள்ளனர்.

காங்கிரஸ் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தும் ஆதிவாசிகளின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பாஜக தலைமையிலான ஆட்சியில் தான் பழங்குடியின மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆதிவாசிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com