10 கோடி பார்வையாளர்களை கவர்ந்த மோடி - மெலோனி வீடியோ!

பிரதமர் மோடியுடன் இணைந்து எடுத்த ஒரு சுவாரஸ்யமான செல்ஃபி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
10 கோடி பார்வையாளர்களை கவர்ந்த மோடி - மெலோனி வீடியோ!
Published on

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கான சுற்று பயணத்தை முடித்துவிட்டு கடைசி பயணமாக இத்தாலி தலைநகர் ரோமிற்கு சென்றுள்ளார்.

அங்கு இருநாட்டு நட்புறவு மற்றும் வர்த்தகம் குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. பின்னர், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற ஒரு பாக்கெட் "பார்லே மெலோடி"சாக்லேட்டை இத்தாலி பிரதமர் மெலோனிக்கு அன்பு பரிசாக வழங்கினார்.

பரிசைப் பெற்றுக் கொண்ட இத்தாலி பிரதமர் மெலோனி, தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து எடுத்த ஒரு சுவாரஸ்யமான செல்ஃபி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் மெலோனி, "பிரதமர் மோடி எங்களுக்கு ஒரு சிறந்த பரிசைக் கொண்டு வந்துள்ளார். அது மிக மிக சுவையான ஒரு டாஃபி" என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.

உடனே அருகில் இருந்த பிரதமர் மோடி புன்னகையுடன், "மெலோடி" என்று அதன் பெயரைக் குறிப்பிடுகிறார். இரு தலைவர்களும் அந்த சாக்லேட் பாக்கெட்டைக் கேமராவிடம் காட்டி சிரிக்கும் இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி 10 கோடி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

சமூக வலைதளங்களில் நரேந்திர மோடி மற்றும் ஜார்ஜியா மெலோனி ஆகிய இருவரின் பெயரையும் இணைத்து #Melodi என்ற ஹாஷ்டேக் ஏற்கனவே உலகளவில் ட்ரெண்டாக இருந்தது.

இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு, பிரதமர் மோடி அதே பெயருடைய இந்திய சாக்லேட்டைப் பரிசளித்திருப்பது, சர்வதேச அரங்கில் இந்தியாவின் ஒரு சுவாரஸ்யமான 'மென்பொருள் ராஜதந்திரமாக' அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com