ராணுவ மோதலால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது: பிரதமர் மோடி

ஒட்டுமொத்த உலகமும் பதட்டமான சூழ்நிலையைக் கடந்து கொண்டிருக்கிறது.
ராணுவ மோதலால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது: பிரதமர் மோடி
Published on: 

ஆஸ்திரியா அதிபர் கிறிஸ்டியன் ஸ்டாக்கர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் டெல்லியில் அவர் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், பிரதமர் மோடி கூறியதாவது:

ராணுவ மோதலால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனில் நிலவும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும்.

இன்று ஒட்டுமொத்த உலகமும் மிகவும் கடுமையான மற்றும் பதட்டமான சூழ்நிலையைக் கடந்து கொண்டிருக்கிறது.

உலகில் நிலவும் இந்தப் பதட்டமான சூழ்நிலையின் தாக்கத்தை நாம் அனைவரும் உணர்கிறோம் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com