இடதுசாரிகள் ட்ரம்பை கொல்ல முயற்சி செய்துள்ளனர் - பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்

டிரம்ப் தனது பேரணியில் சுடப்பட்டார், அவர் இந்த படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார். அவர் புல்லட் புரூப் ஜாக்கெட் அணியவில்லை என்றால், இந்த படுகொலை தாக்குதலில் இருந்து தப்பியிருக்க மாட்டார்.
இடதுசாரிகள் ட்ரம்பை கொல்ல முயற்சி செய்துள்ளனர் - பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்
Published on

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபர சூழல் உருவானது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது. இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார்.

அதில், "டிரம்ப் தனது பேரணியில் சுடப்பட்டார், அவர் இந்த படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார், ஆனால் இடதுசாரிகள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர்... அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

"கிட்டத்தட்ட 80 வயதாகும் இந்த மீது பல தோட்டாக்கள் துளைத்தாலும் அமெரிக்கா வாழ்க என்று கத்திக் கொண்டே எழுந்து இந்த தேர்தலில் வெற்றி பெறுவார். வலதுசாரிகள் ஒருபோதும் சண்டையை துவங்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் தான் சண்டையை முடித்து வைப்பார்கள்.

ட்ரம்ப் தனது மார்பில் ஒரு தோட்டாவை வாங்கினார். அவர் புல்லட் புரூப் ஜாக்கெட் அணியவில்லை என்றால், இந்த படுகொலை தாக்குதலில் இருந்து தப்பியிருக்க மாட்டார். இடதுசாரிகள் ட்ரம்பை கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஒருபோதும் வெறுப்பும் வன்முறையின் வெற்றி பெறாது" என்று கங்கனா தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com