Kerala Assembly Election: கோழிக்கோட்டில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்

கோழிக்கோடு கடற்புரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
Kerala Assembly Election: கோழிக்கோட்டில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்
Published on

கேரளம் மாநிலத்தில் ஏப்ரல் 9-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள நாளை (புதன்கிழமை) கோழிக்கோட்டுக்கு வருகிறார்.

கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.

பின்னர் கோழிக்கோடு கடற்புரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியுடன் வருகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com