பிரதமர் மோடி 100 சதவீதம் டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் உள்ளார் - ராகுல் காந்தி | Rahul Gandhi

பிரதமர் 25 நிமிடங்கள் பேசினார், ஆனால் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
பிரதமர் மோடி 100 சதவீதம் டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் உள்ளார் - ராகுல் காந்தி | Rahul Gandhi
Published on

மத்திய கிழக்கு போர் சூழல் குறித்து நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய 25 நிமிட உரையில் அமெரிக்காவைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாததை மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

குஜராத்தில் வதோதராவில் நடந்த பழங்குடியினர் நிகழ்வொன்றில் பேசிய ராகுல், "பிரதமர் 25 நிமிடங்கள் பேசினார், ஆனால் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. மோடி 100 சதவீதம் டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

பிரதமர் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்கத் தயங்குகிறார், அவர் ஒரு சமரசம் செய்யப்பட்ட நிலையில் உள்ளார்.

அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய விவசாயிகளை அழித்துவிடும்.

அமெரிக்காவில் இயந்திரங்கள் மூலம் பெரிய பண்ணைகளில் விவசாயம் நடக்கிறது. இந்தியாவில் சிறு நிலங்களில் மனித உழைப்பால் விவசாயம் நடக்கிறது.

அமெரிக்கப் பொருட்கள் இந்தியாவிற்குள் தாராளமாக வந்தால், நம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் 'ஆதிவாசி' என்ற சொல்லுக்கு பதிலாக 'வனவாசி' என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன.

'ஆதிவாசி' என்றால் இந்த நிலத்தின் பூர்வகுடி உரிமையாளர்கள் என்று பொருள். ஆனால் 'வனவாசி' என்பது அவர்களைக் காட்டில் வசிப்பவர்களாக மட்டுமே சுருக்குகிறது.

இது அவர்களின் நீர், காடு,நில உரிமைகளைப் பறிக்கும் முயற்சி" என்று சாடினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com