VIDEO: உ.பி.யில் நுழைவுத் தேர்வு எழுத வந்தவர்கள் கால்வாயின் மேல்தளம் உடைந்து உள்ளே விழுந்த விபரீதம்

சுமார் 20 முதல் 25 தேர்வர்கள் அப்படியே சாக்கடைக்குள் விழுந்தனர்.
VIDEO: உ.பி.யில் நுழைவுத் தேர்வு எழுத வந்தவர்கள் கால்வாயின் மேல்தளம் உடைந்து உள்ளே விழுந்த விபரீதம்
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று பி.எட். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக ஏராளமான மாணவர்கள் எச்.என். மிஸ்ரா பிஜி கல்லூரி தேர்வு மையத்திற்கு சென்றிருந்தனர்.

தேர்வுக்குச் செல்வதற்கு முன்பாக, தங்களின் ஆவணங்களை நகல் எடுப்பதற்காக, தேர்வு மையத்தின் அருகிலிருந்த ஒரு ஜெராக்ஸ் கடையின் முன் ஏராளமான மாணவர்கள் திரண்டிருந்தனர்.

அந்த கடையின் முன்புறம் இருந்த பழைய சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மேல்தளம் மீது அளவுக்கு அதிகமானோர் நின்றதால், பாரம் தாங்காமல் அந்த மேல்தளம் திடீரென உடைந்து சரிந்தது.

இதில் சுமார் 20 முதல் 25 தேர்வர்கள் அப்படியே சாக்கடைக்குள் விழுந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாக்கடையில் விழுந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் சில மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், பல மாணவர்களின் உடைகள், புத்தகங்கள், தேர்வு ஹால் டிக்கெட்டுகள் மற்றும் ஆவணங்கள் சாக்கடை நீரில் நனைந்து பாலானது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com