சீன வணிக கப்பல் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஈரான்

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற சீனாவின் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான்
சீன வணிக கப்பல் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஈரான்
Published on

ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கு ஈரான் அரசாங்கம் கடும் நிபந்தனைகள் விதித்துள்ள நிலையில், ப்ராஜெக்ட் ஃப்ரீடம் என்ற மீட்பு திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பத்திரமாக கடப்பதற்கும், மேலும் தடை விதிக்கப்பட்டுள்ள நீரிணையில் சிக்கிய கப்பல்களை மீட்கவும், தேவையான உணவு பொருட்களை வழங்கவும் ப்ராஜெக்ட் ஃப்ரீடம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியாக சென்ற சீனாவை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பல் மீது, ஈரான் அரசாங்கம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது, அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.

சீனப் பிரதிநிதி வாங் யி என்பவருடன், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்‌ஷி, நேற்று பீஜிங்கில் சந்தித்து பேசியுள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுளது.

சீனா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையில் அமைதி ஒப்பந்தம் குறித்தும், ஹோர்மூஸ் நீரிணையை கடப்பது குறித்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com