

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், தங்கம் வாங்குவதற்காகவே இந்தியர்கள் பெருமளவில் கடல் கடந்து வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அதிகபட்சமாக துபாய்க்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரியை 6%-லிருந்து 15%-ஆக ஒரே அடியாக உயர்த்தியது.
இந்த கடுமையான வரி விதிப்பின் எதிரொலியால், இந்திய உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை மிகக் குறுகிய காலத்தில் வரலாறு காணாத அளவிற்குக் கடகடவென உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
மக்கள் தங்கம் வாங்குவதற்காக மாற்று வழிகளை தேடத் தொடங்கினர். வரி மற்றும் செய்கூலி, சேதாரம் போன்ற கூடுதல் கட்டணங்கள் குறைவாக இருக்கும் துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று தங்கம் வாங்குவது தற்போது லாபகரமாக மாறியுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவிலிருந்து துபாய் சென்று தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை தற்போதைய கணக்கின்படி, சுமார் 30% ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சுற்றுலா செல்லும் பயணிகள் அதிகமாக தங்கத்தை வாங்கி வருகின்றனர்.
இந்திய அரசின் தற்போதைய விதிமுறைகளின்படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு திரும்பும் பயனாளிகள் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே தங்கம் கொண்டு வர அனுமதி உண்டு.
துபாயில் இருந்து நாடு திரும்பும் 4 பேர் கொண்ட ஒரு குடும்பம், அதிகபட்சமாக 140 கிராம் வரையிலான தங்க நகைகளைச் சுங்கவரியின்றி இந்தியாவிற்குள் சட்டப்பூர்வமாக கொண்டு வர முடியும்.
ஒரு ஆண் 20 கிராம் வரையிலும், ஒரு பெண் அதிகபட்சமாக 40 கிராம் வரையிலும் வரி இல்லாமல் கொண்டு வரலாம். இது தங்க நகைகளுக்கு மட்டுமே தவிர தங்க கட்டிகளுக்கோ, தங்க நாணயங்ளோ கொண்டு வந்தால் அதற்கு வரி விதிக்கப்படும் என்றும் தெளிவாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தங்கத்திற்கான தேவை எப்போதும் குறையாது. இந்தியாவில் தங்கம் மீதான வரி (15%) மிக அதிகம். அதனால் நகை விலையும் அதிகம். ஆனால், துபாயில் தங்கத்தின் மீதான வரி மற்றும் இதர கட்டணங்கள் மிக குறைவு, அதனால் அங்கு தங்கள் விலை மலிவாக இருக்கிறது.
இதனால் இந்திய விலையை விட பல மடங்கு லாபமாக இருக்கிறது, என நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.