ஆபரேசன் சிந்தூர்: இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் முப்படை தளபதிகள்

இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.
ஆபரேசன் சிந்தூர்: இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் முப்படை தளபதிகள்
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.

இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆபரேசன் சிந்தூர் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முப்படை தளபதிகள் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை விளக்கம் அளிக்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com