search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா தினசரி பாதிப்பு 89 ஆக குறைந்தது
    X

    கொரோனா தினசரி பாதிப்பு 89 ஆக குறைந்தது

    • கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 543 ஆக உயர்ந்துள்ளது.
    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 135 பேர் நலம் பெற்றுள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 91 ஆக இருந்த நிலையில் இன்று 89 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 543 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 135 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 27 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 1,771 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுநேற்றை விட 46 குறைவு ஆகும்.

    தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா பாதிப்பால் புதிய உயிரிழப்புகள் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,745 ஆக நீடிக்கிறது.

    Next Story
    ×