தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 281 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றின் பிடியில் இருந்து நேற்று 171 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் தற்போது 2,901 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 281 பேருக்கு கொரோனா
Published on

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 281 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

பாதிப்பு நேற்று முன்தினம் 334 ஆகவும், நேற்று 324 ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 88 ஆயிரத்து 101 ஆக உயர்ந்துள்ளது. தொற்றின் பிடியில் இருந்து நேற்று 171 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 425 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 2,901 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 110 அதிகமாகும். தொற்று பாதிப்பால் புதிய உயிரிழப்பு எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,775 ஆக நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com