கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று அதிகரிப்பு

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 102 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 360 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக தற்போது 1,916 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று அதிகரிப்பு
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 142 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று 120 ஆக குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 85 ஆயிரத்து 37 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 102 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 360 பேர் குணமடைந்துள்ளனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோருக்கு எண்ணிக்கை நேற்றை விட 17 அதிகரித்துள்ளது. தற்போது 1,916 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் புதிய உயிரிழப்பு எதுவும் இல்லை.

கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,761 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com