மனநலம் சரியில்லாதவர்.. பிரதமர் மோடி பெற்ற விருதை கிண்டலடித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரை சாடிய இந்தியா

மோடியின் வருகைக்கு சில நாட்களுக்கு முன்புதான் அந்நாட்டு அமைச்சரவை இந்த விருதுக்கு ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி, கவாஜா ஆசிப்
பிரதமர் மோடி, கவாஜா ஆசிப்
Published on

பிரதமர் மோடிக்கு கடந்த ஜூன் 28 அன்று சீஷெல்ஸ் நாடு வழங்கிய மிக உயரிய 'கார்டியன் ஆப் தி ப்ளூ ஹொரைசன்' விருதை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் போலியான அங்கீகாரம் என கிண்டலடித்தார்.

இதற்கு இந்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. மத்திய அரசு வட்டாரங்கள் இதுகுறித்து கூறுகையில்,

பொறாமை

"கவாஜா ஆசிப் ஒரு மனநிலை சரியில்லாதவர் என்பது உலகறிந்த விஷயம். அப்படியொரு நபரிடம் பாதுகாப்பு துறையை ஒப்படைத்திருப்பது பாகிஸ்தானின் தற்போதைய அவல நிலையை தெளிவாகக் காட்டுகிறது.

அவருக்கு வேறு உருப்படியான வேலை எதுவும் இல்லை. தனக்குத் புரியாத விஷயங்களைப் பற்றி முட்டாள்தனமாகப் பேசி நேரத்தைக் கடத்தி வருகிறார்.

பொறாமை எப்போதுமே ஆபத்தானது, குறிப்பாக வெறுப்புப் பிரச்சாரம் செய்பவர்களிடமிருந்து அது வெளிப்படும் போது இன்னும் மோசமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை

கார்டியன் ஆப் தி ப்ளூ ஹொரைசன் விருதைப் பெறும் உலகின் முதல் நபர் பிரதமர் மோடி ஆவார்.

பிரதமர் மோடியின் வருகைக்கு சில நாட்களுக்கு முன்புதான் அந்நாட்டு அமைச்சரவை இந்த விருதுக்கு ஒப்புதல் அளித்தது.

எனவே விருதில் டிஜிட்டல் முறையில் சில வேலைப்பாடுகள் சேர்க்கப்பட்டது இது போலியான விருது என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறுகிய காலத்தில் விருது தயாரிக்கப்பட்டதால் டிஜிட்டல் முறையில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டதாக சீஷெல்ஸ் அரசு விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com