பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி.யைச் சேர்ந்த விமானப் படை ஊழியர் சுமித் குமார் கைது! | Pakistan

கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய விமானப் படையின் ரகசியத் தகவல்களை அவர் கசியவிட்டுள்ளார்.
pakistan spy
pakistan spy
Published on: 

அசாம் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி.யைச் சேர்ந்த விமானப் படை ஊழியர் சுமித் குமார் கைது செய்யப்பட்டார்.

கடந்த 3 ஆண்டுகளாக திப்ருகார் விமானப்படை தளத்தில் பணிபுரிந்து பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய விமானப் படையின் ரகசியத் தகவல்களை அவர் கசியவிட்டுள்ளார். இந்த குற்றச்செயலை கண்டறிந்து ராஜஸ்தான் புலனாய்வு போலீசார் அவரை கைது செய்தனர்.

சுமித் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 2023 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும், பணத்திற்காக ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com