கோட்டை சுவர் இடிந்து விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான கோட்டை சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
madhyapradesh
Published on

மத்தியபிரதேச மாநிலம் டாடியா நகரில் பெய்து வரும் கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான ராஜ்கர் கோட்டை சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com